Other News

ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகச் செயற்படவேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை

“தேசிய இனப்பிரச்சினையும், பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன. ஆகேவ, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் உரியவகையில் தீர்வுகண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துணிச்சல்மிக்க அரசியல் தலைவரென பாராட்டிய அவர், தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு […]

மூவின மக்களுக்கும் பாகுபாடின்றி அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்! – ரணில் உறுதி

“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது 40 வருடகால நாடாளுமன்ற […]

புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகியிருப்பார் ரணில்! – ஹக்கீம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என்றும், எனினும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அத்திட்டத்தை அவர் நிராகரித்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:- “1977 […]

ரணிலை வாழ்த்தும் விசேட அமர்வு மஹிந்த அணியால் புறக்கணிப்பு! – மூத்த அமைச்சர்கள் கடும் கண்டனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி தொடர்ச்சியாக 40 வருட கால சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும்வகையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வை பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் புறக்கணித்தன. நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார். […]

ரவி பதவி விலகவேண்டுமென கபே அமைப்பும் வலியுறுத்து!

பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “பிரச்சினை உருவாகியுள்ள இந்த வேளையில் அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருப்பது விசாரணைகளுக்குப் பாதகமாக அமையும். ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசுக்கு வாக்களித்த 62 இலட்ச மக்களின் […]

2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்

2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் […]

விசா விதிகள் தளர்வு: புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு டிரம்ப் சலுகை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் […]

யாழ். வன்முறைகளுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்பு! – தவராசா

யாழ்.நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அசம்பாவிதங்களுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்கள் என தெற்கில் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலிப் […]

அரசாங்கத்தில் புயலை கிளப்பியுள்ள அமைச்சர் ரவி விவகாரம்!

மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை, அரசாங்கத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அமைச்சர் ரவியை பதவி நீக்குவது அல்லது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறாறில்லாவிட்டால், அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க […]

வவுனியாவில் மக்கள் குடியிருப்புக்களில் குரங்குகளின் அட்டகாசம்!

வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளன. குறித்த பகுதிகளுக்கு நாளாந்தம் வந்து செல்லும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள […]