வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல் செய்துள்ளதுடன், வடக்கு மாகாண சபையும் பொருத்து வீட்டினை எதிர்த்து வருகின்றது. இந்நிலையில், வடக்கில் […]
Other News
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும்: கருணாகரம்
அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழாவில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தின் 5 வருட […]
வடக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்தது தமிழரசுக் கட்சி! – முதலமைச்சரின் பழிவாங்கும் செயலை அடுத்து சீற்றம்
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று யாழ். நகரில் கூடி இந்த முடிவை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது. தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் […]
யாழில் பெரும் பதற்றம்! 2 நாட்களில் 25 இளைஞர்கள் கைது!! – படையினரின் தேடுதல் தீவிரம்
யாழ். குடாநாட்டில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், ‘பீல்ட்பைக் குறூப்’ குவிக்கப்பட்டு வீதிச் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளால் துன்னாலையிலும், கோண்டாவிலிலும் 25இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. போர்க்காலச் சூழலைத் திரும்பவும் நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன. துன்னாலையில் 13 பேர் கைது! வடமராட்சி, துன்னாலையில் […]
வடக்கு அமைச்சரவை விவகாரம்: பிரச்சினை இப்போதைக்கு ஓயாது!
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விவகாரத்தில் தோன்றியுள்ள சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வரும்போல் இல்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். சபையின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலமைச்சரின் குழு அளித்த அளிக்கையின் அடிப்படையில் இரு அமைச்சர்களை அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கோரினார். அதனடிப்படையில் விவசாய அமைச்சராக இருந்தவரான பொ.ஐங்கரநேசனும், கல்வி அமைச்சராக […]
வடக்கு முதலமைச்சர் விடாப்பிடி! அமைச்சரவை விரைவில் மாறும்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார். அமைச்சரவையைப் பற்றிய முடிவுகளில் எவரது தலையீடுமின்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். “அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும். அது பகுதியாகவா, முழுமையாகவா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர் […]
யார் வேண்டுமானாலும் சந்தித்து விவாதிக்கலாம்! – கூட்டமைப்பு விவகாரத்தில் ரெலோவுக்கு புளொட் பதில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த யார்வேண்டுமானாலும், அவர்கள் எந்த மட்டத் தலைவர்களாக இருந்தாலும் சந்தித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான விடயங்கள் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைமை மட்டத்தில்தான் ஆராயப்படவேண்டுமே தவிர, மாவட்ட மட்டத் தலைவர்களினால் அல்ல என்று ரெலோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளின் மாவட்டத் […]
சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு
‘சமஷ்டி’ கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் தீர்ப்பு வழங்கியுள்ளார். “இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்கும் கொள்கையுடன் செயற்படவில்லை” என்றும் தனது தீர்ப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு மற்றும் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அந்தக் […]
சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ஏரியில் மீன் பிடித்த ரஷிய அதிபர் புதின்
சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏரியில் மீன் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (64). இவர் பன்திறமை கொண்டவர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதிவரை கடும் குளிர் நிறைந்த சைபீரியாவில் 3 நாள் விடுமுறையை கழித்தார். அப்போது தைவர் பகுதியில் உள்ள மலை ஏரியில் […]
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட துக்கதினம்: ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 72-ம் ஆண்டு துக்கதினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக கருதப்படும் ‘லிட்டில் பாய்’ குண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 6-8-1945 அன்று வீசியது. இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், […]





