வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில், “பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சாரப்படுத்தி அந்தப் பொருத்து வீடுகளை எமது மக்களின் தலையில் கட்டி இலாபம் […]
Other News
கிழக்கு மாகாணத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பு, மு.கா. தயார்! – ஹக்கீம் அறிவிப்பு
“மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புப் பற்றிப் பேப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளன.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் […]
என்னை மீண்டும் கைதுசெய்ய முயற்சி! – பதறுகின்றார் நாமல்
தன்னை மீண்டும் கைதுசெய்யும் முயற்சி இடம்பெறுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்ற அரசியல்வாதிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மக்கள் விடுதலை முன்னணியின் […]
புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
மறுசீரமைக்கப்பட்ட புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய அரசின் பங்காளிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு […]
‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு நல்லதொரு உதாரணமென மஹிந்த அணியான பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம் என்பது கிள்ளுக்கீரை வியாபாரமல்ல. தனிநபரொருவர் மீதோ அவரது குடும்பத்தினர் மீதோ […]
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று ராணுவத்தால் மீட்கப்பட்டது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த […]
தென் கொரியா: கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி
தென் கொரியா நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டேங்கர் வெடித்த விபத்தில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தகப் பகுதியான ஜின்ஹானே என்ற நகரில் எஸ்.டி.எக்ஸ். ஆஃப்ஷோர் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த ஆர்டருக்காக 74 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் […]
ஜனாதிபதியை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்
அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கப்படுகின்றமை குறித்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை பிற்போடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து பல கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் […]
யாழில் வரலாறு காணாத வகையில் திரண்டுள்ள மக்கள்!
யாழ். நல்லூரானின் தேர்த் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித்தாவல்கள் செப்டம்பரில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.





