ஆசியாவின் தலைசிறந்த சுற்றுலா வலயமாக காலி – பிரதமர்

காலி மாவட்டம் ஆசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் நான்காயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் சகலருக்கும் காணி உரிமைகள் உறுதி செய்யப்படும்.

களுத்துறையில் 800 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் போன்றவை வருவாய் ஈட்டும் அமைப்புக்களாக மாற்றப்படுமென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க உரையாற்றுகையில் ,

மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்றார். சில இடங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமில்லாத காணிகளில் அரச நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகளை அந்தந்த நிறுவனங்களுக்கு உரிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *