Other News

செப்டம்பர் 5-ல் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்

சென்னையில் நாளை மறுநாள் (செப். 5-ம் தேதி) அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். […]

ஜெ. தனது வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், “சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான், தன் வாரிசாக யாரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், […]

எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை

போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு! – அதற்கே முயல்கிறோம் என்கிறார் சம்பந்தன் 

“எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம். எங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் […]

சமஷ்டிக்கு இதுதான் தருணம்! – சுமந்திரன் எம்.பி. விவரிப்பு

“தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கும் – ஏன் சுயநிர்ணய உரிமையைக்கோருவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை உயர்நீதிமன்றத்திடமிருந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டு அரசை அமைத்திருக்கின்றன. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்.” – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் […]

மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து […]

புதிய அரசமைப்புக்கு முடிவுகட்ட நேரில் களமிறங்குகிறார் கோட்டா! – பரப்புரைப் போரை முன்னெடுக்க 6இல் ‘வெளிச்சம்’ எனும் அமைப்பு உதயம்

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாகக் களமிறங்கி பிரசாரப் போரை வழிநடத்தவுள்ளார். இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் அதன் செயற்பாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார். அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளதுடன், அதற்குத் தலைமை தாங்குமாறு தனது […]

மைத்திரிபால சிறிசேன

சு.கவின் அதிருப்திக்குழு மைத்திரியுடன் பேச்சு! – பட்ஜட் கூட்டத்தொடரின்போது ‘பல்டி’க்கு தயாராக உத்தேசம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நடைபெற்றுள்ள நிலையில் அதிருப்தி நிலையில் இருக்கும் சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசிலிருந்து வெளியேறும் தமது முடிவை அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வெளியிடவுள்ளனர் என்றும், அதன் பிறகு கூட்டரசிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்றும் அறியமுடிகின்றது. தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என மைத்திரியுடன் உள்ள 17 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக […]

வலுக்கின்றது சு.கவின் உட்கட்சிப்பூசல்! கேள்விக்குறியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை!! 

புதிய அரசமைப்பு, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என முக்கிய சில அரசியல் நகர்வுகளுக்குச் செல்லவேண்டிய சூழலில் தேசிய அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் 66ஆவது தேசிய மாநாடு இன்று  ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பொது எதிரணியிலுள்ள எவரும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, தனக்கு அழைப்பில் கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி […]

மைத்திரி ரணில் அரசு

மைத்திரி – ரணில் அவசர சந்திப்பு! – ஊவா, தென் மாகாண சபைகளுக்கு ’20’ திருத்தத்துடன் மீண்டும் அனுப்பிவைப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மீண்டும் குறித்த திருத்தச் சட்டமூலத்தை சில திருத்தங்களுடன் அனுப்புவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பின் பின்னரே மேற்கண்டவாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கு […]