Other News

டீச்சர் வராட்டி என்ன… நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகினி!

சேலம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார். ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை […]

நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசு !

அரியலூர்: நீட்’ தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது’ என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் குழுமூரில், ‛நீட்’ காரணமாக டாக்டர் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை என்பது சாத்தியம் இல்லாதது. […]

பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு காங்., – எம்.எல்.ஏ., கேள்வி

சென்னை: ‘நீட்’ தேர்வு தொடர்பாக, மூன்று கேள்விகளை எழுப்பிய, பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசைக்கு, காங்., – எம்.எல்.ஏ., விஜயதரணி, மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார். ‘நீட்’ தேர்வுக்கு, விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள, காங்., தலைவர்களுக்கு, தமிழிசை சமூக வலைதளங்களில், மூன்று கேள்விகளை எழுப்பினார். ‘நாடு முழுவதும், நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன் முதலில் கொண்டு வந்தது யார்; நீட் தேர்வுக்கு ஆதரவாக […]

தினகரன் பேனர்களை கிழித்து விருத்தாசலத்தில் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தினகரன் பேனரை கிழித்து, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ., உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி, எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அ.தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர். கடலுார் கிழக்கு மாவட்டச் செயலரான அமைச்சர் சம்பத்தை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, கலைச்செல்வனை, மாவட்டச் செயலராக, தினகரன் அறிவித்திருந்தார். இது, அதிருப்தியை அதிகரித்தது. அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை கிழக்கு மாவட்டச் செயலர் ரமேஷ் […]

நீட் விவகாரத்தில் தமிழக அரசு போராடும்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg

நாட்டுக்கு கிடைத்த வள்ளல் மோடி: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

புதுடில்லி: நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல்’ என மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.

20 ஆவது திருத்தம் அடியோடு மாற்றம்! – அரசுத் தலைமை முடிவு; உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் வடிவத்தை அடியோடு மாற்றுவதற்கு அரசு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது. சகல மாகாண சபைகளையும் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடத்தில் கலைக்கவும், அதன் பின்னர் ஒரே நாளில் சகல சபைகளுக்குமான தேர்தலை நடத்தவும் புதிய திருத்த வடிவம் வழி செய்கின்றது. அதன் பின்னர் மாகாண சபை ஒன்று முற்கூட்டியே கலைக்கப்படும் சூழல் நேருமானால் அந்த மாகாண சபையின் எஞ்சிய ஆட்சிக் காலத்துக்கான நிர்வாகத்துக்கென […]

மைத்திரியின் ‘போர்க்குற்ற’ அறிவிப்பால் மேற்குலக தூதுவர்கள் அதிருப்தி! கொழும்பில் கூடி அவசர ஆய்வு!! – ஜெனிவாத் தொடரிலும் ‘தலையிடி’யாக மாறும் அபாயம் 

படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி […]

யுத்த காலத்தில் அரசிற்கு

பொன்சேகாவின் கருத்து மீது கோட்டாபய கழுகுப்பார்வை! – விரைவில் பதிலடி வழங்கப்படும் எனவும் சூளுரை

“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”  என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தான் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே கோட்டாபய […]

இறுதிப் போரில் நடந்தது என்ன? நீதிமன்றில் ஆஜராகி உண்மையை அம்பலமாக்குக! – பொன்சேகாவிடம் சம்பந்தன் கோரிக்கை

“இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை  சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]