ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராகிய தான் அக்கட்சியின் ஊடாகவே மீள் அரசியல் பிரவேசத்தை விரும்புகிறார் என்றும், தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 36 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார். […]
Other News
’20’ இற்கு எதிராக சிவில் அமைப்புகள் போர்க்கொடி!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார். தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் […]
புதிய அரசமைப்பு நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியா! – சுஷ்மாவை மீண்டும் சந்தித்து வலியுறுத்தினார் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு […]
புதிய அரசமைப்புக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு! – அமெரிக்காவிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு
“புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர். அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர்.” – இவ்வாறு அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும் பிரதான […]
மாணவர்களைப் பற்றி கவலைப்படாத அரசால் ஒரு உயிர் போயுள்ளது
சென்னை : தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அரியலூர்மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அவர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தும், நீட் தேர்வு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு […]
கொன்னே போட்டுட்டீங்களேய்யா…. வயிறு எரிகிறது
சென்னை: மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து அனிதாவை கொன்றுவிட்டதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கொந்தளித்துள்ளார். அனிதாவின் தற்கொலை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q
ப்ளு வேல் விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை
புளூ வேல் கேம் விபரீதம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அரசும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. […]
அசல் ஓட்டுநர் உரிம விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதற்கு, வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் […]
திருமண விழாவில் ஆவேசமாக அரசியல் பேசிய கமல்..!
கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பல அரசியல் கருத்துக்களை நடிகர் கமல் ஆவேசமாக பகிர்ந்துகொண்டார். கோவையில் ஈச்சனாரியில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கமல், “என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும். நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி […]
அரசியல் சுற்றுலா மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் கேரள மாநிலத்திற்கு அரசியல் குறித்து தெரிந்து கொள்ள கல்விசுற்றுலா மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும், அவர் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்துவந்தார். குறிப்பாக ஆளும் அதிமுக அரசை ஊழல் அரசு என மிக கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார் […]





