Other News

30 லட்சம் ரூபாய் 2,000 நோட்டு கள்ளநோட்டுக்கள் பறிமுதல்!

காரைக்குடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் கள்ள நோட்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு, ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், விடுதியில் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்ட சென்னையை சேர்ந்த சையது பஷீரிடம் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் […]

பாஜக அமைச்சரவையில் அதிமுக இணைகிறது ?

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜிவ் பிரதாப் ரூடி, ஃபாகன் சிங் குலஸ்தி, உமா பாரதி, மகேந்திர பாண்டே உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜினாமாக்களை அடுத்து, மத்திய அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகுமத்திய அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த புபேந்திர யாதவ், பிரகலாத் […]

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து

“போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை கட்டாயம் தண்டிக்கவேண்டும். இராணுவ உடை அணிந்ததற்காக குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்காது இருக்கமுடியாது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. உரிய நீதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் அங்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் […]

ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்தால் முன்னாள் போராளிகளை சிறைபிடிப்போம்! – மிரட்டுகிறார் சம்பிக்க

போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கட்டளைத் தளபதியாக […]

ராஜபக்ஷக்களின் ‘பைல்’களை தூசு தட்டத் தயாராகிறது அரசு! – சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசேட அறிக்கை கோருகிறார் புதிய நீதி அமைச்சர்

துரித விசாரணைகளின்றி நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் தமக்கு விசேட அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கும், இவற்றுக்கு எதிராக ஏன் சட்ட ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவுமே நீதி அமைச்சர் விசேட அறிக்கையைக் கோரியுள்ளார் என உயர்மட்ட அதிகாரியொருவர் […]

புதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்

“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து […]

புதிய அரசமைப்பு தேவையில்லை! – பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னர் சம்பந்தனுக்குப் பதில் என்கிறார் மஹிந்த

“புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை. அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலில் பேசவேண்டும். அதன்பின்னரே சம்பந்தனுக்கு உரிய பதிலை வழங்கமுடியும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் […]

புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் மஹிந்த! – சம்பந்தன் நேரில் வலியுறுத்து

“புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்” என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்படி கருத்தை வெளியிட்டார். […]

மஹிந்த – சம்பந்தன் மந்திராலோசனை! – புதிய அரசமைப்புக் குறித்து விரிவான கருத்துப் பகிர்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சத்தம் சந்தடியின்றி சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்கள் மந்திராலோசனை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் […]

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி 

“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா  சுவராஜ். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் […]