தற்போதைய எதிரக்கட்சித் தலைவரிலும் பார்க்க தாம் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எளிய என்ற அமைப்பு இனவாத அமைப்பென அண்மையில் எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் நேர்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படுபவர். கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்த சூழல் காரணமாக அவரால் தமிழ் மக்களுக்கென எதனையும் […]
Other News
பாலி தீவு அகங் எரிமலை குமுறல் 50 விமான சேவைகள் இரத்து
பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு […]
மழைக் காலநிலை தொடரும்
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. விசேடமாக மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு வாக்களிக்குமாறு சந்திரிக்கா கோரிக்கை
கட்சி பேதங்கள் பாராது நாட்டுக்காக பணிபுரியக்கூடியவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். வேயங்கொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரவித்தார். கட்சியில் தவறிழைத்தவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக்கொண்டே நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காகவன்றி நாட்டுக்காக முன்னிலையாகும் எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். தேசத்திற்காக தொலைநோக்குடன் செயற்படக் கூடிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் […]
ஜனாதிபதி நாளை கொரியக் குடியரசுக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை கொரியக் குடியரசுக்கான மூன்று நாட்கள் உத்தியேபகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய ஜனாதிபதி முன் ஜே இன்னின் அழைப்பிற்கு அமைய, இந்த விஜயம் இடம்பெறுகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்துவற்காக தலைவர்கள் விரிவாக பேச்சுவார்த்தை […]
மாவீரர்களை ஒரு சேர நினைவிலேந்தும் மாவீரர் நாள்!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒரு சேர வணங்கிப் போற்றும் மாவீரர் நாள் இன்று தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படுகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் சுடறேற்றி வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரையில் சரியான முறையில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர முடியாத அவல நிலையை தமிழ் மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். […]
தடவியல் நிபுணர்களால் தடவல் மன்னன் நித்யானாந்தாவுக்கு சிக்கல்
சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் தான், அதில் டூப்ளிகேட் எதுவும் இல்லை என்று சமீபத்தில் டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் நித்யானந்தா வழக்கு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை காரசாரமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமம் முன் […]
ஆர்.கே.நகரில் கமல்ஹாசன் போட்டியா?
கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும் நேரிலும் அரசியல் கருத்துக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய சகோதரர் சாருஹாசனே கமலும், ரஜினியும் சேர்ந்து கட்சி ஆர்மபித்தாலே 5% ஓட்டுக்கு மேல் கிடைக்காது என்று கூறியுள்ளதால் அரசியல் கட்சியை உடனே தொடங்க அவர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கை உறுதி […]
வாராந்திர ராசிபலன் 27-நவம்பர் – 3-டிசம்பர்-2017
மேஷம்:பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய தயங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய திட்டம் மனதில் உதயமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியங்கள் சாதிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சகோதரங்களால் நன்மை உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் […]
இன்றைய ராசிபலன் 27.11.2017
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். […]





