யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக குடு வகை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பிராந்திய பொலிஸ்மா அதிபரின் கீழான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்றைய தினம் நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து குறித்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 குடு பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவற்றின் மொத்த நிறை 2.5 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் 35 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் அவர்களிடமிருந்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *