புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் 69,070 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும் இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் […]
Other News
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குக !
நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை உறுதிசெய்யவுள்ளது. அவ்விலக்கை அடைந்துகொள்வதற்காக அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்றிச் செயற்படுவதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள ஊடக செல்நெறி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைக்கோரும் ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்பமிடும் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கு நான் பொறுப்பாளியல்ல மஹிந்த ?
உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது எனது புகைப்படத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இன்றைய ராசிபலன் I 02.01.2018 I
மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்: கடந்த இரண்டு இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். தடைப்பட்ட வேலைகளை […]
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவர் சபாஷ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை […]
கதாநாயகியாக அறிமுகமாகும் ஜூலி!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஜூலியும் 4 […]
பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போம். என்றும் உங்கள் தமிழருவி ஊடகம் மற்றும் குழுவினர்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை
உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக […]
முரசொலி இணையதளம் முடக்கம்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முரசொலி பத்திரிக்கை திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. திமுகவின் முரசொலி பத்திரிக்கை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவள விழாவில் கருணாநிதியின் புத்தகங்கள், புகைப்படங்களின் தொகுப்பு, மெழுகு சிலை என கண்காட்சிக்கு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் இன்று […]





