ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் […]
Other News
ரஜினியுடன் கூட்டணி வைத்தால் அவ்வளவுதான்
எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி […]
ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று […]
கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிற்கு நடந்த சோகம்
கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணியை கொலை செய்த மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பர்வீன் பானு கடந்த 2015 ஆம் ஆண்டு மாயமாகி உள்ளார். இதனையடுத்து இளையராஜா தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸார் பர்வீனின் தொலைபேசி அழைப்புகளைக் […]
ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்
அரசியலுக்கு வரும் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் […]
ரஜினி படிப்பறிவில்லாதவர்
ரஜினி அரிசியலுக்கு வரப்போவதாக இன்று காலை அறிவித்திருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரஜினியைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. […]
அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம்
மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர். கடந்த முறை […]
கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி
கென்யா நாட்டில் பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் 30 பேர் இன்று உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் கென்யா நாட்டில் பசியா பகுதியில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து வந்த லாரி ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரத்தினை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தினால் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நான் அரசியலுக்கு வருவது உறுதி
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், இன்னும் 10 நிமிடங்கள் பொறுங்கள். மண்டபத்தில் அறிவிப்பினை பாருங்கள் என கூறி சென்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விழா மேடைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனை அடுத்து […]





