முக்கிய செய்திகள்

Head News

கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!

கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைபெறுவது குறித்த கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு கேட்டலோனியா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதை ஸ்பெயின் ஏற்காத நிலையில் கேட்டலோனியா விடுதலையடைந்ததாகத் தன்னிச்சையாக அறிவித்தது. இதையடுத்து அந்த மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும், மீண்டும் […]

திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த […]

அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது கட்டலோனியா

ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது. கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் […]

மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா? அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் […]

இன்றைய ராசிபலன் 28.10.2017

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது […]

இன்றைய ராசிபலன் 27.10.2017

மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் […]

ஹீரோவாக பிக்பாஸ் ஆரவ்வின் முதல் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை

கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி […]

இந்தோனேஷியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து

ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது. தீ விபத்தை அடுத்து அங்கிருந்த வெடிகள், வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது, தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் […]