உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள […]
முக்கிய செய்திகள்
Head News
இன்றைய ராசிபலன் 23.10.2017
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ரிஷபம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு […]
“தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!” – யாழில் செவ்வாயன்று மீண்டும் போராட்டம்
தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து […]
அரசியல் கைதிகள் விடயம்: விரைந்த தீர்வு அவசியம்
அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- “இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு […]
யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்
“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் […]
விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!
மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காலதாமதம்! – பப்லோவிடம் ஒப்புக்கொண்டார் சபாநாயகர்
“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான்.” – இவ்வாறு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் ஒப்புக்கொண் டார் சபாநாயகர் கரு ஜயசூரிய. இரண்டு வாரகால உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ […]
ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்; போர் வரும்போதுதான் பேசுவார் – சீமான்
மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர […]
அதிகாரப் பகிர்வு மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
“அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற – துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் […]
வவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனாதிபதி! – நன்றி தெரிவித்தார் தாய் (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். […]





