முக்கிய செய்திகள்

Head News

டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகிறதா நிலவேம்பு குடிநீர்?

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சித்த வைத்தியத்தின் மூலம் எளிதில் குணப்​படுத்தலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

மருத்துவமனையில் நடராஜன் ; வெளியான புகைப்படம்

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை […]

நமது இயக்கத்தில் இணையுங்கள்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். […]

வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.!

வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். […]

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி […]

தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு

சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை […]

யாழில் தொடர்கிறது பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞரொருவர் படுகாயமடைந்திருந்தார். குறித்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவார். இந்தச் […]

உண்ணாவிரதக் கைதிகள் பலவந்தமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் பலவந்தமாகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளான ம.சுலக்ஷன், க.தர்ஷன், இ.திருவருள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர்களது உடல் பலவீனமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் […]

கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் கடந்த வருடம் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரி­வித்தார். றூவிஷன் நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை கல்வி அபி­வி­ருத்தி கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அட்­டா­ளைச்­சேனை ஒஸ்றா மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், அதி­க­மான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களில் 70 வீதமா­னவை குடும்ப உற­வி­னர்­க­ளி­னா­லேயே […]

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற […]