முக்கிய செய்திகள்

Head News

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய […]

2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்

நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் […]

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர், இரட்டை மடிவலைகளை பயன்படுத்துகின்றனர் என கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 3 […]

இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்.!

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் – 2.11.2017

மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதுலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் […]

அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை

நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் […]

நியூயோர்க்கில் தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் பலி

நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதை மற்றும் பாதசாரிகளுக்கான பாதைக்குள் திடீரென பிரவேசித்த டிரக் வண்டியொன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த டிரக் வண்டியை செலுத்தி தீவிரவாதத் தாககுதலில் இடுபட்ட 29 வயதான நபர் நியூயோர்க் நகர பொலிஸாரால் சுடப்பட்ட […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 1.11.2017

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர் கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் […]

ஜெயலலிதா மர்ம மரணம்- 15 பேருக்கு நீதிபதி நோட்டீஸ்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 15 பேருக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் இருந்து இன்று விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பட்டுள்ள 15 பேரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை முறைப்படி தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கோவையில் உள்ள நீதியரசர் ஆறுமுகசாமி, புதன்கிழமையன்றே சென்னை திரும்புவார் […]