முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் அவருடைய தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிக்கும் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்று […]
முக்கிய செய்திகள்
Head News
தனிக்கட்சி தொடங்கும் நெருக்கடியில் தினகரன் – பின்னணி என்ன?
இரட்டை இலை சின்னம் கை விட்டு போய் விட்டதால் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது. இனிமேல், அதிமுக என்கிற கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி – ஓபிஎஸ் அணியால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், ஏற்கனவே இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியையும், எடப்பாடி அணியினர் பறித்துவிட்டனர். […]
இரட்டை இலை சின்னம் எடப்பாடி – ஓபிஎஸ் அணிக்கே – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது. இரட்டை இலை கிடைக்கும் அணிக்கே தேர்தலில் […]
எடப்பாடி அணிக்கு இரட்டை இலை
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் புகார் கூறியுள்ளார். பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். […]
அரசியல் களத்தில் இறங்குவது எப்போது? ரஜினிகாந்த் பதில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது ‘பொர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று அரசியல் களத்தில் இறங்குவது குறித்து கூறினார். இந்த நிலையில் நேற்று மந்த்ராலயம சென்ற ரஜினி அங்கு தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் ‘அரசியல் களத்தில் எப்போது இறங்குவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘களம் இறங்குவதற்கு தற்போது அவசரம் இல்லை” என்று […]
கந்து வட்டி கொடுமை – குரல் கொடுத்த கமல்ஹாசன்
தலை விரித்தாடும் கந்து வட்டி கொடுமையை சட்டம் தடுத்து நிறுத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக விஷால், அமீர், சுசீந்திரன் உள்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார். ஆணையத்தில் முதன்முதலாக பிரமாண […]
கமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் போடும் பதிவுகள் அனைத்துமே சுத்தமான செந்தமிழில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பல டுவீட்டுக்கள் உண்மையிலேயே கோனார் உரையை தேட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரில் உள்ள ஊழல்கள், குற்றங்கள் குறித்து செந்தமிழில் குரல் கொடுத்து வரும் கமல், நேற்று தன்னுடைய துறையில் கந்துவட்டியால் ஒரு உயிர் இழந்ததற்கு மயான அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனின் […]
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு வடகொரியா என அமெரிக்கா அறிவிப்பு
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்ததை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னிற்கும் இடையேயான கருத்து மற்றும் கிண்டல் மோதல்களும் உச்சத்தை எட்டி வருகிறது. […]
2018ல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்!
வரும் 2018ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கொலோராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹாமும், மொனாட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரெபேக்காவும் நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதையடுத்து அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த புவியியல் மாநாட்டில் அவர்கள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் வரும் சில ஆண்டுகளில் உலகம் பயங்கர நிலநடுக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.





