முக்கிய செய்திகள்

Head News

காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து 15 வயது சிறுவன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சின்னா என்பவர் சென்னை அருகே திருவேற்காடு, கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் டேவிட்டைத் திருவேற்காகடு காவல்துறையினர் திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 15 வயதுச் சிறுவனான டேவிட்டை 2நாட்கள் விசாரணையின்போதும் காவல்துறையினர் […]

இன்றைய ராசிபலன் 22.11.2017

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள். Loading… ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி […]

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிப்பு

ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980–ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து, ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார். ஆனால், முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து […]

நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்

மீனவர்தினத்தை முன்னிட்டு மன்னார் நகர  மண்டபத்தில்  கார்த்திகை  21 இன்று காலை 11 மணியளவில் MSEDO அமைப்பின் தலைவர் திருவாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில்வடமாகாணத்தில்  உள்ள மீன்  பிடியை வாழ்வாதாரமாக  கொண்ட ஆண் மற்றும் பெண் மீனவர்கள் சுமார் 500 மீனவ  பிரதி நிதிகளின் பங்குபற்றுதலுடன்   இடம் பெற்றது.  “நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்”  என்ற  கருப்பொருளில்  இடம் பெற்ற இந்த நிகழ்வை  மன்னார் சமூக  பொருளாதார  மேம்பாட்டுக்கான […]

புலிகள் மீண்டும் உருவாவதை விரும்பவில்லை: இரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகுவதை காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது கட்சி போரையும், வன்முறைகளையும் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சம்பந்தமான வழக்குகளை விசாரித்து நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) […]

வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

சிறு­மியை மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடு­வித்த குற்­றச்சாட் டில் பொலிஸ் அதி­கா­ரியை சிறை­யில் அடைத்­துள்­ளீர்­கள். அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு, சுவிஸ்­கு­மாரை விடு­விக்­கச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் சபை­யில் இப்­போ­தும் இருக்­கின்­றார். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விம­ல­வீர திசா­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் நீதித்­து­றைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் […]

மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசால் வடக்கு மாகாணத்துக்கு ரூ.150 மில்லி. நிதியுதவி

வடக்­கில் மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக நோர்வே அரசு மேல­திக நிதி­யு­த­வி­யாக 150 மில்­லி­யன் ரூபா வழங்­க­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.இது தொடர்­பில் நோர்­வேத் தூத­ர­கம் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் புதி­தாக விடு­விக்­கப்­பட்ட மயி­லிட்­டித் துறை­மு­கத்தை அண்­டிய பகு­தி­க­ளில் மீளக் குடி­ய­ம­ரும் மக்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு 150 மில்­லி­யன் ரூபாவை வழங்க முன்­வந்­துள்­ளது. இதற்­கான உடன்­ப­டிக்­கை­யில் இலங்கை மற்­றும் மாலை­தீ­வுக்­கான நோர்­வே­ஜி­யத் தூது­வர் தூர்­பி­யோன் கவு­ஸத்­சேத்த மற்­றும் இலங்­கைக்­கான ஐக்­கிய […]

தப்பியோடிய ஆவா குழுத் தலைவர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில்சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்டநிலையில் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில்இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் […]

நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவின் எதிரொலி! களமிறங்கியது விசேட பொலிஸ் குழு

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி பொலிஸ் குழுக்கள் யாழில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை(14) இரவு யாழ். கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால் மடம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா […]