சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அதிமுக வேட்பாளரை விரைவில் அறிவிக்கும். தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். திமுக சார்பில் யாரை […]
முக்கிய செய்திகள்
Head News
ஆர்.கே.நகரை ரவுண்டு கட்டிய போலீஸ்
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவித்தபோது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.500 முதல் ரூ.5000 வரை கொடுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதுமாதிரி எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து கண்காணிக்கின்றது. ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் போலீசாரால் ரவுண்டு கட்டப்பட்டன. போலீசை மீறி ஒரு சைக்கிள் கூட செல்ல முடியாதாம். 24 மணி நேர […]
ஆர்.கே.நகரில் போட்டியிடும் பிரபலம் யார்?
வரும் டிசம்பர் 21ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தினகரன் மற்றும் தீபா ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட போவது உறுதி என்று தெரிவித்துவிட்டனர். அதேபோல் அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் பாஜக ஒரு பிரபலத்தை இந்த தேர்தல் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘“எந்த […]
எழுச்சி பெற்று வரும் தேராவில் துயிலுமில்லம் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியை மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் இளைஞர்கள் என […]
திமுகவில் சேர வேண்டும் என நினைத்திருந்தால்… : கமல்ஹாசன்
பலவருடங்களுக்கு முன்பே தன்னை திமுகவில் சேரும்படி திமுக தலைவர் கருணாநிதி அழைத்தார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிக்கை தொடங்கி 75 வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கொண்டாடும் வகையில் திமுக சார்பில் நேற்று பவளவிழா கொண்டாடப்பட்டது. அதில், பல அரசியல் பிரமுகர்களும், பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தும் இதில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் “ என்னிடம் நீங்கள் திமுகவில் […]
எகிப்து மசூதியில் தொழுகையின் போது வெடிகுண்டு 155 பேர் உயிரிழப்பு
வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 120 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் […]
அழிவின் ஆரம்பமா ?
இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிப் கோட்ஜஸ் என்பவர் அவரது குழுவினருடன் சேர்ந்து பூமியின் பகல் நேரம் குறித்து கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார். தற்போது அந்த ஆராய்ச்சியின் ஆய்வு குறித்து அறிக்கையை கட்டுரையாக ‘சைன்ஸ் அட்வான்ஸ்’ என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் பூமியின் பல இடங்களில் இரவுக்கும், பகலுக்கும் […]
தொப்பி அணியும் தினகரன் – ஆர்.கே.நகரில் போட்டி
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 5ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெறும். மனுவை வாபஸ் பெறுவதற்கு டிசம்பர் 7ம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி […]
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
புலனாய்வாளர்களின் அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக […]
விடுமுறை மாற்றத்தால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்
தமிழக அரசு விடுமுறை பட்டியலில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மிலாடிநபி காரணமாக விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நவம்பர் 19ஆம் தேதி பிறை தென்பட்டுள்ளதால் டிசம்பர் 2ஆம் தேதியே மிலாடி நபி என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் ஒன்றுக்கு பதில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசின் தலைமை காஜி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இவரது […]





