அரசாங்க அனுசரணையுடன் நடாத்தப்படும் மத வைபவங்கள் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மீலாத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை பல்வேறு இனங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்த மதக் கோட்பாடுகளை பின்பற்றும் மக்களைக் கொண்ட தேசமாகும். இந்நாட்டின் வரலாற்றுக் காலம் தொடக்கம் மத வைபவங்கள் ஊடாக சகவாழ்வை கட்டியெழுப்பும் முயற்சிகள் […]
முக்கிய செய்திகள்
Head News
பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்
தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். மிகுந்த நெருக்கடியான நிலையில் வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் […]
புதிய அகதி அந்தஸ்து எவருக்கும் வழங்கப்படவில்லை – பிரித்தானியா
புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களது விண்ணப்பங்கள் […]
ஓகி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள்
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை துவம்சம் செய்த ஓகி புயல் இன்று திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் இனி புயல் அபாயம் இல்லை என்றும் இருப்பினும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்த […]
மக்களே அவதானம் !
நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டி வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றக் காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்மிகவும் விழிப்பாக இருக்குமாறு […]
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
ஓகி புயல் காரணமாக நேற்று குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்கள் புரட்டி போடப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,தேனி, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு
அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைந்து விடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், நாட்டின் பல பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டு;ள்ளது. வடக்கு, வடமத்திய, […]
2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?
ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் […]
தப்பிக்குமா தமிழகம்?
கன்னியாகுமரி கடற்பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயலைத் தொடர்ந்து, அடுத்து ஒரு புயலை தமிழகம் சந்திக்கவுள்ளது. குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே […]
தாயகத்தை கண்முன்னே நிறுத்திய சார்சல் மாவீரர் நாள்
போராளிகள் இணைந்து தமிழீழ விடுதலைப்போரின் முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணாவின் நினைவுத்தூபி அமைந்துள்ள சதுக்கத்தில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு அமைதியாக தாயகத்தை கண்முன்னே நிறுத்தி நின்றது. மேலும் சிறப்பாக எமது 1066 மாவீரர்களது திருவுருவப்படங்களையும் தரிசிக்க பிரஞ்சுநாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் , சார்சல் மாநாகர முதல்வரும், வல்துவாஸ் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியும் , சார்சல் மாநகரசபை பிரமுகர்களும் வந்திருந்தார்கள். முக்கியமாக பிரான்சு நாட்டின் […]





