முக்கிய செய்திகள்

Head News

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்.!

2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் […]

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தெற்கு அந்­தமான் தீவு­களில் தற்­போ­தைக்கு தாழ­முக்கம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. அத்­தா­ழ­முக்கம் எதிர்­வரும் தினங்­களில் உக்­கி­ர­ம­டைந்து மத்­திய வங்­காள விரி­கு­டா­வி­னூ­டாக இந்­தியா நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க […]

ஊடகவியலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச தின மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை நடைபெறவுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறும் செயலமர்வில் முக்கிய உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த மாநாட்டில் […]

மாற்றத்தின் மூலம் நிலையான மகிழ்ச்சி

உடலளவில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாகவே இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. இதனை பார்க்காமல் உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.3ம் தேதி, ‘சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ‘மாற்றத்தின் மூலம் நிலையான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை அனவருக்கும் உருவாக்குவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. […]

இன்றைய ராசிபலன் 03.12.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து  கொடுத்துப் போவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். முக்கிய கோப்புகளை […]

இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ?

இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 ஆம் அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் […]

சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்? கழுவி ஊற்றிய எடிட்டர்!!

சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில், […]

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சைகளாக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் பாஜக சார்பில் பிரபலமான வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால் வேட்புமனு தாக்கலுக்கான […]

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் விஷால்: திமுக, அதிமுக அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் என்றும், வரும் திங்கள் அன்று அவர் மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆர்.கே.நகரில் சுயேட்சையாக […]

பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.