நாட்டின் அரசியல் குழப்பங்களை தீர்க்க இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்ட நிலையில், யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை எதிர்பார்ப்பதாக வட. மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.சிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 100 குடும்பங்களுக்கு முன்னாள் முதலமைச்சரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் […]
இலங்கை செய்திகள்
மீண்டும் ரணிலின் சகாக்களிற்கு வலை விரிக்கும் மைத்திரி அணி
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களை தமது கட்சியில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது அதிருப்தியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி , ஹேஷா விதானகே , ஹெக்டர் அப்புஹாமி மற்றும் லக்ஷ்மன் விஜேமான்ன உள்ளிட்டவர்கள் அமைச்சுப் […]
வருகின்றது சுமந்திரனின் தீர்வு! எப்போது தெரியுமா?
அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, […]
கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு
வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் […]
முக்கியஸ்தரின் கட்டுப்பாட்டில் செயல்படும் சபாநாயகர்? அம்பலமான ரகசியம்
சபாநாயகர் கருஜயசூரிய, சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு 54 […]
ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறும் முக்கிய கூட்டணி
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சப் பதவி (CABINET MINISTRY) வழங்கப்படாமை உட்பட மேலும் சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே இத்தகையதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். ” என்று மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். நாட்டில் […]
மகிந்த – சம்பந்தன் தகராறின் அடுத்த நிலை
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக மூண்டிருக்கும் தகராறைத் தீர்த்துவைப்பதற்கு நீதித்துறை தலையிடவேண்டியது அவசியமாகும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பில் இலங்கையின் முன்னணி சிவில் சமூகத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்றுப் பணிப்பாளராகக்கொண்ட தேசிய சமாதானப் பேரவை அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி […]
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்
நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற அநாகரிக செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக் குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடியது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சைகள் இடம்பெற்றன. குறிப்பாக நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மைத்திரி […]
சுமந்திரனுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்து இன்பத்தில் ஆழ்த்திய ரணில்!
சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். […]
சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இதுவரை காலமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த பிரத்தியேக கடவுச்சீட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் விநியோகிக்கப்படமாட்டாது. ஆனால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து […]





