இலங்கை செய்திகள்

ஜனாதிபதி

புதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி!

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடபோவதுமில்லை. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி […]

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

கூட்டமைப்பின் திட்டத்தை தோற்கடிக்க போடப்படும் பாரிய திட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரையில் எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்விடும் எந்த திட்டமும் நாடாளுமன்றத்தில் தடுக்கப்படும். […]

இராணுவத்துக்கு எதிராக பொங்கி எழுந்த முல்லைத்தீவில் மக்கள்

கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக எமது களநிலைச் செய்தியாளர் கூறுகின்றார். ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை […]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் […]

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.அத்துடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போதும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு செயற்படவுள்ளதாகவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த ஒரு வருடத்தில் சகல மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும்.கடந்த மூன்றரை வருடங்களிலும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் முழுமையான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு மக்களின் ஆட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்காகவே சுயாதீனமாக இயங்குவதற்கான தீர்மானத்தை […]

தேசிய ரீதியில் சாதித்த தமிழ் மாணவர்கள்…

இலங்கையின் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது, உயிரியில் விஞ்ஞான பிரிவில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கலனி ராஜபக்ச பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி விஜயகுணவர்தன வர்த்தக பிரிவில் […]

தமிழர்களை ஏமாற்றிய மைத்திரியின் அடுத்த தந்திரம்

வடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் […]

மஹிந்த அணியிலிருந்து 15 பேர் ரணிலுடன் இணைவு

மஹிந்த அணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைய உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார். இது […]

ஆளுநர் பதவிகளில் திடீர் மாற்றம்! மூவருக்கு ஆப்பு..

ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், தற்போது ஆளுநர் பதவிகளில் உள்ள மூவரின் பதவி பறிபோகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மாகாண ஆளுநர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னரே, ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், புதிய சிலருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே மூன்று பேரின் பதவி […]

சம்பந்தனிடம் மன்னிப்புக் கோரிய கரு ஜெயசூரிய!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. […]