ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்ப்பார்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் பொறுத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் […]
இலங்கை செய்திகள்
மகிந்த மற்றும் கோத்தாவிற்கு எதிராக இனபடுகொலை குற்றச்சாட்டு!
மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளரிற்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படுகொலை குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சுமத்தவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு […]
மைத்திரி மகிந்த இணைந்து கூடவுள்ள மாபெரும் கூட்டணி!
சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை முன்னிறுத்திய பரந்த கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தக் குட்டணி அனைத்துக் கட்சிகளை இணைத்ததாக அமைந்திருக்கும் என்றும் ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இதனை இறுதிசெய்யும் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை தேர்தலுக்கு தயாராகுமாறு இன்று காலை நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துளார். அதனடிப்படையில் நாடாளுமன்றைக் கலைக்கக்கூடிய நான்கரை […]
ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே மஹிந்த இவ்வாறு செயல்படுவதாக குற்றச்சாட்டு!
தனது ஆட்சியைக் காப்பாற்ற பதவிகளையும், பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கொள்வனவு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு தனது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்குமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனினால் முன்மொழியப்பட்ட, மட்டக்களப்பு ஐயங்கேணி பாடசாலை […]
ரணில் – மைத்திரி ஆலோசனை!
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்த்து, அமைச்சரவையில் 30 பேரை நியமிக்கலாமென பிரதமர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகரிக்கக் கூடாதென்பதில் ஜனாதிபதி மைத்திரி உறுதியாக உள்ளார். எனினும், அதுதொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்று […]
தமிழர் பகுதியை நோக்கி மைத்திரி அவசர உத்தரவு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இவ்வாறு அவசர உத்தரவு விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் வடக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக 9 பிரதேச செயலகங்களில் 2,788 குடும்பங்கள் […]
மகிந்தவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சிபாரிசு
எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், “நாம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதற்கேற்றவாறு தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆகையால்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை […]
பதவியை கையளிப்பதே சம்பந்தனுக்கு மதிப்பு! மகிந்த
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பான்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது. அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதேசிறந்ததாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் […]
ஆசிரியர் ஒருவரை தேடி பொலிஸார் வலைவீச்சு
வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் இரு அதிபர்கள் ஆகியோரின் போலி கையொப்பங்களுடனும் போலி அரச இறப்பர் இலச்சினைகளுடனும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச வங்கியொன்றில் பதின்மூன்று இலட்சம் ரூபா கடன்பெற்று தலைமறைவாகியிருக்கும் ஆசிரியர் ஒருவரைத் தேடி மொனராகலைவிசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் வலை விரித்துள்ளனர். வெள்ளவாய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. ரட்ணசிரி மொனராகலை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட […]
நீரில் மூழ்கிய முல்லைத்தீவு மாங்குளம் பகுதி!
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மழை வெள்ள அனர்த்தம் மாங்குளம் நகர் துணுக்காய் வீதி, கல்குவாரி , நீதிபுரம் போன்ற இடங்கள் நீரில் மூழ்கின. ஆகையால் மக்கள் இதில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மேலும் கடைகள் வீடுகளுக்குள் நீர்த்தேக்கம் கால்நடைகளும் இறப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடையவைத்துள்ளது.





