வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு, அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார். அங்கு நின்ற சிப்பாய் ஒருவருக்கும், இளைஞனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன் […]
இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 4,113 குடும்பங்களைச் சேர்ந்த 16,801 வரையான மீனவர்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழச்சிநிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் வாழ்வாதார […]
ஜெனீவா விரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமக்கு அரசாங்க விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் தாம் ஜெனீவா செல்ல […]
மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா
மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும், மரண தண்டனை தொடர்பான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. எனவே […]
காரைதீவிலிருந்து தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்!
காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்து தமிழ் பெண் சாதனை படைத்துள்ளார் காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இரசாயனவியல் பாடம் கற்பித்து வருகிறார். கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியான குணாளினி ஓய்வுநிலை தொழினுட்ப உத்தியோகத்தர் பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் […]
யாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறப்பதற்காக ரணில் விக்கிரமசிங் இன்று யாழ் வைத்தியசாலையில் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார்.
பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தற்போது விமா நிலையத்தில் கூடியுள்ளனர்.
பொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது!
வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, சியபலாண்டுவ பகுதியில் தங்கியிருந்த 22 இலங்கையர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில், வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் பின்னரே, இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆள்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு சந்தேக நபர்கள், திஸ்ஸமஹாராம – பன்னேகமவ […]
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்!
போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் […]
மகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மகிந்தவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கில் ராஜபக்ச குடும்பத்துக்கு தனி மரியாதை உண்டு. தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த புலிகளை நாம் தோற்கடித்தோம் […]





