இலங்கை செய்திகள்

மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் புறக்கணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஷ இடம்பெறாதமைக்கு ஸ்ரீ.ல.சு.க. விளக்கமளித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். […]

நாடு முழுவதும் 3711 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் மே மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு எதிரான வழக்கின் மனு மீதான விசாரணை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் […]

தமிழர்களின் இனப்படுகொலை குறித்து மனோ வெளியிட்ட அறிவிப்பு

தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினை மறக்க முடியாதென்றும், மன்னிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியுமென இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனை […]

ஜனாதிபதி

இறுதி யுத்தத்தில் ராணுவ வீரர்கள் செயல் குறித்து மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஊடகமொன்று போர்க்குற்ற விசாரணை குறித்து கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாரும் […]

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்

நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் […]

நுவரெலியாவில் 2 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன?

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வரை குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் தெரிவித்துள்ளனர்.இதனால் பெற்றோர்கள் பிள்ளையை நினைத்து கதறி துடிக்கின்றனர். இவ்வாறு காணாமல் போன குழந்தை தனது வீட்டில் […]

மீண்டும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் டொலருக்கு எதிராக வளர்ச்சியடைந்து காணப்பட்ட ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜனாதிபதி

மைத்திரி மீது நீதிமன்றத்தில் மற்றுமொரு புகார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என்று குற்றம்சாட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 14 நாட்களுக்கு வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் சிறிங்கா அதிபரின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் […]

முக்கியஸ்தர் ஒருவருக்கு சவால் விடுத்த மகிந்த

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் இருப்பார்களேயானால் உடனடியாக வெளிப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கேன் பாவிப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் கூறும் பொழுதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள அனைவருக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரையும் குற்றஞ்சாட்ட முடியாது, அவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே போதைப் […]