நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை […]
இலங்கை செய்திகள்
தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு – சிராட்டிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த யோகராசா சரஸ்வதி (வயது 52) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த தாயின் மகன் யோகராசா துசியந்தன் (2018) க பொ த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் […]
முல்லைத்தீவில் பொலிஸாரிற்கு எதிராக மக்கள் போராட்டம்
விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப்பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் 18.02.19 அன்று மதுபோதையில் உந்துருளியில் பயணித்த மூவர், மிதிவண்டியில் வீதியில் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதித் தள்ளினர். படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கா வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். […]
யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் அங்கிருந்து செல்ல தான் மறுப்பு தெரிவித்தமையால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய […]
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடரும் குழப்பம்
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ விரும்புவதாக […]
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம்
பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் […]
நானும் ஒரு தாய் தான்! சந்திரிக்கா வெளியிட்ட உருக்கமான பதிவு
நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல தடவைகள் வடக்குக்குச் சென்றுள்ளேன். அந்த மக்களின் உள்ளக் குமுறல்களை நேரில் பார்த்துள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் […]
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை!
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உயர் தர வகுப்பு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மீண்டும் வீட்டிலிருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற […]
புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் நகர்பகுதி இன்று புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தந்த உலங்குவாணூர்தி ஒன்று தரை இறக்கம் செய்யப்படும் போதே இவ்வாறு புலுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த உலங்குவாணூர்தி தரை இறக்கம் செய்யப்பட்டது. இதன்போது குறித்த மைதானத்தில் காணப்பட்ட கிரவல் தூசிகள் உள்ளிட்டவை புயல்போல் […]





