இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரனின் மனு நிராகரிக்கப்பட்டது

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த […]

அனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்

போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 40 வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சா் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றிணை அமைத்து நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும், அதுமட்டுமல்லாமல் இலங்கை […]

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்ளில் இருந்து தெரியவருகின்றது. அதன் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணை தற்போது பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் […]

மகிந்த

நாடு திரும்பும் மகிந்த ராஜபக்சே

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது இந்திய பயணத்தை நிறைவு செய்து இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க

ரணிலின் கோரிக்கையை மறுத்த அமைச்சரவை

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க மறுத்துள்ளது.குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு […]

கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் தலைமையில் […]

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசு வேலை!

பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, ஓய்வுப் பெற்ற பாடசாலை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாத்தளை- நாவுலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் யோசனையொன்றை சமர்ப்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வெள்ளை வான் கடத்தலை அறிமுகப்படுத்தியவர் யார்? கோட்டா

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே […]

நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த கோட்டபய ராஜபக்சே! நீதிபதிஅதிரடி உத்தரவு

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சார்பில் மேற்கொண்ட கோரிக்கையை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் வழக்கின் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அந்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தனே

பொருளாதர மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தன் ஐயாவே என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்..வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது. பின்னர் சில அரசியல் வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்க வேண்டும் […]