எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உரையுடன் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரின் உரை அமைந்திருந்தது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை தொடர்பான விவாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித […]
இலங்கை செய்திகள்
மாதா சொரூபதில் ஏற்பட்ட அதிசயம்! படையெடுக்கும் பக்தர்கள்
வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது. 75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
தற்போதைய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை. எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ […]
ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”வெளிநாட்டுபங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு […]
போர் குற்றங்களில் இருந்து இராணுவத்தை காப்பாற்ற மைத்திரி போடும் புதிய திட்டம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை உறுதி செய்துள்ளார். நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள அமர்வுகளிற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்,நாங்கள் சில முன்னேற்றங்களை காண்பித்துள்ளோம், என தெரிவித்துள்ள சிறிசேன எங்கள் படையினர் யுத்த குற்றங்களில் […]
உறவுகளுக்கு நீதிகோரி நல்லூரில் ஆரம்பமான புதிய முயற்சி
வலிந்து காணாமல் ஆக்கபபட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, 3 லட்சம் கையொப்பம் பெற்று ஐ.நாவிற்கு அனுப்பும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்தனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர். வெளிநாட்டவர் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை இட்டனர்.
கொழும்பில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…
மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறித்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2945 மில்லியன் பெறுமதியான 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்தே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணையால் பதறும் மகிந்த
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த […]
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகள்?
எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி மௌனம் காத்து வருகிறது.ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் […]
கொழும்பில் அதிரடியாக களமிறங்கிய அதிரடி படையினர்…..
இரு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளஎதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் ரத்கம நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடிபடையினர் களமிறகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சம்பவ இடத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதேச மக்களினால் காலை 10 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக காலி கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.





