நாட்டில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த காலங்களைவிட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நிலவிய யுத்தத்தை எக்காலத்திலும் நிறைவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள். […]
இலங்கை செய்திகள்
20 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்!
ஜே.வி.பி.யின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற […]
புதிய கூட்டணி தொடர்பில் மகிந்த பேச்சவார்த்தை முன்னெடுப்பு
புதிய கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழு, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அரசியல் நோக்கங்களை […]
இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா நடைமுறை!
சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் […]
பிரதமரை சந்திக்கவுள்ள அரச நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு
அரசாங்க நிறைவேற்று பணிப்பாளர்கள் ஒன்றிணைந்த குழுவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் மேற்கொள்ள ஆர்பாட்டத்தினை ரத்து செய்யும் வகையிலேயே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
எதிரிகளை தூள் தூளாக்கி கவிதையை பறக்க விட்ட இந்திய இராணுவம்!
காஸ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். பின்னர் நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என அன்றே முடிவெடுத்த பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை தயார் படுத்த ஆணையிட்டு, சிறப்பு படை தயாரானது. ராணுவத்திற்கு இந்தியா முழு சுதந்திரத்தை கொடுத்தது.. இந்நிலையில் இன்று காலை, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் […]
மைத்திரி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு
அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுதினம் இது விடயமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் கிளை பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை […]
உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான இறுதி திகதி இன்று!
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
இலங்கை சர்வதேச முதலீடுகளை இழக்கின்றது
உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே […]
பாலச்சந்திரனை கொலை செய்தது இராணுவம்! சிறீதரன் எம்.பி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். சென்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கேட்கவில்லை. அபிவிருத்தியையே கேட்கின்றனர் என்ற கருத்தை கூறியுள்ளார். என்ன […]





