மக்கள் விடுதலை முன்னணியினருடானா சந்திப்பினையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தசந்திப்பில் பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் ரோஹன லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற […]
இலங்கை செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினரின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்துள்ளார். இதன் விளைவாகவே […]
இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை
இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் 20ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின், இலங்கை தொடர்பான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, […]
அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் மைத்திரி!
பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.இதன்போதே ஜனாதிபதி கடும் தொனியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘சுஜாத தருவோ’ எனப்படும் ‘கண்ணியமான […]
நாட்டின் பிரதமராக தமிழரே இருக்க வேண்டும்! கோத்தா அதிரடி அறிவிப்பு
தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று தமிழ் கட்சிகளுக்கு தெரியாதுள்ளது.தமிழ் கட்சிகள் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்களுக்கு அந்தத் தேவையில்லை.பொருளாதார சமநிலையும் நாட்டின் அனைத்து துறையிலும் அபிவிருத்தியும் இருந்தால் […]
மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு
மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் குண்டு ஒன்றினை மன்னார் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். மன்னார் – பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதை சந்தியிலிருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 கிலோ கிராம் நிறையுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் […]
கொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொருள்!
கொழும்பை அண்மித்த பகுதியில் வைத்து மிகப் பெரிய பெறுமதியுடைய இரத்தினகல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதுஷின் சகாக்களை தேடும் விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார். பன்னிப்பிட்டிய, ஆரவ்வல பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினகல் மீட்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி 500 […]
பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன்! சிறிதரன்
நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பினார். வடக்கு கிழக்கில் திறந்த வெளி சிறைச்சாலையில் மக்களின் சொந்த நிலைகளை விடுவிக்க முடியாத, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும். சமாதான காலத்தில் ஏன் பாதுகாப்புக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆகவே இது யுத்த […]
ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட விசேட அறிவிப்பு
உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளின் சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , தேர்தல் வருடமான இவ்வருடத்தின் முதல் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் எனவும் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது பொதுத்தேர்தல் அதற்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக […]
திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில்!
திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதி காலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏ ழுமலையானை தரிசித்துள்ளார். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழி யாக […]





