யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, மற்றும் பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் ஆயிரத்து 500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது விவசாயிகள் […]
இலங்கை செய்திகள்
இலங்கையில் சில பிரதேங்களில் இடம்பெற்ற நிலநடுக்கம்!
மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி இயக்குனர் உதய குமார தெரிவித்துள்ளார். அதற்கமைய பதுளை, ஹாலிஎல, பசறை, வெலிமடை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக நிலையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி […]
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு!
ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலிப் பூஜையின் பின்னர் திருச்சொரூபப் பவனியுடன் திருவிழா நிறைவுபெற்றது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குப்பணிமனை மேற்கொண்டிருந்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகளும் இத்திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா! வரலாற்று […]
எதிவரும் காலத்தில் டிஜிட்டல் மையமாக மாறவுள்ள பொருளாதாரம்
எதிவரும் காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமாக சிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுள்ளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரின் அதிரடி உத்தரவு
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் அறிவித்துள்ளார் எனவும் சபாநாயகர் இதன்போது அறிவித்துள்ளார். கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் […]
மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வரும் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருந்தார். எனினும், அவர் இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கின்ற நிலையில், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான நிதியில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச தற்போது, சிறப்பு மேல்நீதிமன்றத்தில் […]
வவுனியாவில் இன்று வயல் அறுவடை விழா…
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் வயல் அறுவடை விழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உதவி விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் குறித்த விழா இடம்பெற்றுள்ளது. வவுனியா விவசாய திணைக்களத்தில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன. மேலும் இம்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, […]
அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது
அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும். […]
வறுமையில் வாடும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!
உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ நாம் கடந்த […]
வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் […]





