இலங்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றபோதிலும் அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லையென குறிப்பிடப்படுகின்றது.நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன சபையில் இதனை தெரிவித்தார். அத்துடன் இவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் கல்வி என்பது அரசினால் மட்டும் கட்டி எழுப்பப்படக்கூடியதல்ல. அதற்கு பல்வேறு தரப்பினரினதும் பங்களிப்பு அவசியம். எனவே தான் வெளிநாடு சென்று கல்வி […]
இலங்கை செய்திகள்
சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி
மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் சற்று முன் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டர்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகவே […]
புலம்பெயர்ந்தவர்களை அழைத்துவர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களை, தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவ்வாறு அழைத்து வருவோருக்கு வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வீடுகளுடன் காணிகள், வேளாண்மை […]
விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்! – ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்!
ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ”எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாக செயற்பட்டோம். எமது […]
யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு
யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மற்றும் வட. மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்குமென […]
வெளிநாட்டு இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!
சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார். இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்கது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் […]
மைத்திரிக்கு இன்று ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில் அணி
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுகிறது. இன்றைய தினம் அரசியலரங்கில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சுக்களிற்கான நிதி ஒதுக்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காதென தெரிகிறது. எனினும், ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீடுகளிற்கு ஐ.தேக.வின் எம்.பிக்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் வாக்கெடுப்பை கோருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஐ.தே.கவின் சுமார் 45 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கான […]
இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!
இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், […]
நாடாளுமன்றத்தை புறக்கணித்த மைத்திரி
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை. குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணயிலிருந்து இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தே இன்றைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, குழுநிலை விவாதங்களின்போது தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். […]





