இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 […]

ஜனாதிபதி

பொது மக்களுக்கு மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு

பாதீட்டு இடைவெளியை சமாளிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றாய் இருப்போம் என்ற தொனிப்பொருளில் புத்தளம் மாவட்டத்தில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். பில்லியன் கணக்கான பாதீட்டு இடைவெளியை தணிப்பதற்கு நாம் அனைவைரும் முக்கியமான விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகள் என்று பலரும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் […]

வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர். வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 […]

யாழில் மீண்டும் வாள்வெட்டு குழுவினர்…

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் சாரதி ஒருவர் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உந்துருளியில் வருகைதந்த குழுவொன்றே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய இலங்கைத் தமிழர்!

சர்ச்சைக்குரிய நபரை இலங்கைக்கு நாடு கடத்த தாம் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கு தேவையான ஆவணங்களை வழங்கினால் அவரை நாடு கடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு தேவையான சந்தேக நபரை நாடு கடத்துவதற்கான உடன்படிக்கையில் சிங்கப்பூர் இணைந்துள்ளது. இதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால […]

கொழும்பில் கூழ் விற்பனை

தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கூழ் செய்யும் முறை என்னவென்பது இளய சமுதாயத்தினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள், அதன் சுவை மற்றும் அதன் போசாக்கு பற்றி இளைய சமுதாயம் அறிய வேண்டுமென்பதை நோக்காகக் கொண்டு வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் எதிர்வரும் சனிக்கிழமை பங்குனி 23ம் திகதி காலை 11 மணிக்கு கூழ் விற்பனை செய்யவுள்ளனர். கொண்டு செல்லக்கூடிய கொள்கலங்களில் இவ்விற்பனை கொழும்பு-6 […]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் தடயவியல் கணக்காய்வை நடாத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என, இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீடு குறித்து, 5 தடயவியல் கணக்காய்வுகளை […]

இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் ஐ .நா.வில் கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து பத்து […]

ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் – திமுக

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் […]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் […]