மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடும் சூழ்ச்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வகுப்பதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, மக்களின் தேர்தலை உரிமை தொடர்ந்து மீறப்படுவதை கருத்திற் கொண்டு இம்முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்த நாங்கள் இணக்கம் தெரிவித்தோம். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். தற்போது 07 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத […]
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என […]
சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா ?
அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை. அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபரின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் […]
பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலதிகமாக 65 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிகமாக 1500 பஸ்களும் தனியார் பஸ்கள் 2200 இலிருந்து 2600 வரையான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக […]
யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு
அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.குறித்த நபர்கள் இன்று (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் குறித்தும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாதுகாப்பு […]
யாழில் பொலிஸ் மீது தாக்குதல்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்குச் […]
மைத்திரி – மகிந்த இணைவார்களா ? பிரிவார்களா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.
பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி
மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு […]
பலாலி விமான நிலையத்தில் தரையிரங்கினார் சந்திரிக்கா!!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு ஆலோசனை
அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]





