எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க விரும்புகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா என்பது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீ […]
இலங்கை செய்திகள்
அரச சலுகைகள் வேண்டாம் என வலியுறுத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கவுள்ள பங்களாவை பெற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் அடியோடு நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்ட பினனர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றிருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலமும் அடங்கும். எனினும், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவரான பின்னர், அவர் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலத்தை பெற்றுக்கொள்ளவில்லை. வயதில் […]
இலங்கை மக்களிடம் மைத்திரி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை […]
அமெரிக்க குடியுரிமையை துறந்த கோத்தா
அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகள் வெற்றிகரமாக பூர்த்தியாகி விட்டதென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. அமெரிக்காவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய கோத்தபாயவிற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர், ஊடகங்களிடம் பேசியபோதே இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மத்திய, சப்பரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்கள் அம்பாறை மற்றும் […]
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு?
யாழ். மாதகல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு வெளியிட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி […]
கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை விரைவில் ரத்து
அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய அவரை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இந்த விடயம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த […]
புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கால்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் […]
அமெரிக்கா பறந்தார் நிதியமைச்சர் மங்கள!!
நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி ராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர். நிதியமைச்சர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் 4,142 ஏக்கர் நிலம் படையினரின் வசம் !!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பது மாவட்டச் செயலகங்களின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு சம்பந்தமான தற்போதைய நிலைமை, மற்றும் தீர்வுகள்பற்றி மக்கள் பிரதிநிதிகள், படையினர் இடையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் […]





