இலங்கை செய்திகள்

சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி

சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார். சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் […]

Maithripala Sirisena

பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ”தேசிய அரசாங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எந்தவொரு சூழ்நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர்களாக சிறிலங்கா அதிபர் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கமாட்டார். அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உள்நாட்டு விவகார […]

முல்லைத்தீவில் பெரும் சோகம்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் அதிக வெப்பமான வானிலை காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 51 வயதானவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடுகளை மேய்க்கும் அவர், ஓய்வுக்காக கூடாரம் ஒன்றில் உறங்கிய வேளையில் அவர் மரணித்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்!!

மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திய பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்து தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர், மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளு­ட­னும் பொலி­ஸார் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத்­தால் தெரி­விக்­கப்­பட்­டது. சுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு பொலி­சா­ரும் மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திச் சென்­ற­தோடு வீதி­யால் பய­ணித்த பெண் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் மோதித்­தள்­ளி­னர். இதன்­போது வீழ்ந்த இரு பொலி­சா­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட சம­யம் இரு­வ­ரும் போதை­யின் […]

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்தை வெளியிட்டார் மஹிந்த

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பெல்லன்வில ராஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது மின்சாரம், நீர், அதிக […]

இறுதி யுத்தத்தில்

கோத்தாவிற்கு எதிரான வழக்கு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பில் விசாரிக்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு […]

வளர்ச்சியை தடுக்கவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு..!

“எங்கள் வளர்ச்சியை தடுக்கவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட, எங்கள் சின்னத்தை தெளிவாக பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்” என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால், நாம் தமிழர் கட்சியின் […]

கருணாவுடன் புகுந்து விளையாடியவரின் இரகசியங்கள் கசிந்தது

தேசிய தலைவருக்கு எதிராக கருணாவுடன் இணைந்து செயல்பட்ட பிரபலம் என்று எழுதப்பட்ட கட்டுரை குறித்து சில உண்மைகளை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த கட்டுரையில் 2004,ம் ஆண்டு விடுதலைப்புலிகளை பற்றி கருணாவுக்கு ஆதரவாக நான் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் அதில் மாற்றமில்லை உண்மை… கருணா என்னை 2004,ம் ஆண்டு வேட்பாளராக நியமித்ததாக குறிப்பிட்டுள்ளது 2004,ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவு தேர்தல் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் […]

மின்சார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இதுதானாம்!

உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நேற்று இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.இந்தநிலையில் இந்த திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டப்படி 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும்.இந்த திட்டத்தின் மூலம் தேசிய மின்சார உற்பத்திக்கு 120 மெகாவோட்ஸ் மின்சாரம் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்உமா […]

எமது நிலம் எமக்கே வேண்­டும்!!

எமது சொந்த நிலத்தை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருக்­கக் கூடாது. அந்த நிலங்­க­ளி­லி ­ருந்து இரா­ணு­வம் உடன் வெளி­யேற வேண்­டும். எமது நிலம் எமக்கே வேண்­டும். இது வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளின் பிர­தான கோரிக்கை. இந்­தக் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் உதா­சீ­னம் செய்ய முடி­யாது. எனவே, வீராப்பு வச­னங்­களை நிறுத்­தி­விட்டு எமது மக்­க­ளின் கோரிக்­கையை அர­சும் இரா­ணு­வ­மும் நிறை­வேற்ற வேண்­டும்.” இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் […]