இலங்கை செய்திகள்

இலங்கையிடம் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுப்பதாயின் அதற்காக கப்பம் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கொடியுடன் எரிபொருள் ஏற்றி வந்த கப்பல் நேற்றைய தினம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது. துபாய் நிறுவனமொன்றில் பதிவு செய்யப்பட்ட எரிஸ் 13 எனும் மேற்படி கப்பலில் 8 ஸ்ரீலங்கா மாலுமிகள் கடமை புரிவதாக கடற்படை தெரிவித்திருந்தது. கப்பலை தேடும் ஐரோப்பிய சங்கத்தினர் கொள்ளையர்களை தொடர்பு கொண்ட போதே […]

தமிழர்களின் - ஸ்ரீநேசன்

தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன்

தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன் ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மான அமுலாக்கத்திற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் கேட்பதற்கும் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் […]

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கை

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம்

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான […]

காணாமல்போனோரின் விடயத்தை

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம்

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம் “காலத்தை இழுத்தடித்து – எங்களை அலைக்கழித்து, காணாமல்போனோர் பிரச்சினை காணாமல்போகச் செய்வதற்குக் நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றதா ? இவ்வளவு நாட்களாகப் போராடி வருகின்ற எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இந்த அரசு.” – இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 24 ஆவது நாளாக […]

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு […]

பன்னங்கண்டி மக்களுக்கு

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு […]

யாழில் பெண்ணொருவர்

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல் யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் […]

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 35கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை இரவு கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அதே பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர். கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சரை ஒன்றும் கைபெற்றப்பட்டிருந்தது.           […]

மன்னார் பிரதான வீதியில் விபத்து

மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம் மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும், தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான […]

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல்

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் இலங்கை தேசியக் கொடியுடன் சென்ற எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டுபாய்க்கு சொந்தமான Aris – 13 என்ற இக் கப்பல் எட்டு கப்பல் பணியாளர்களுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் கப்பலில் இருந்த கடல் கண்காணிப்பு கட்டமைப்பு செயலிழந்ததாகவும் கடற்கொள்ளை […]