யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்

யாழில் பெண்ணொருவர்
யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்

யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →