சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி “சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுப்புக்குத் தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளைச் செய்வதற்கு அரசமைப்பில் எந்தத் தடையும் இல்லை. அப்படி ஏதாவது தடை இருக்கின்றது என்றால் அந்தத் தடையை நீக்கி விட்டு அதனைச் செயற்படுத்துங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் […]
இலங்கை செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினது போராட்டம் வடக்கில் ஏற்கனவே 3 மாவட்டங்களில் தொடரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மருதங்கேணியில் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்றுப் புதன்கிழமை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில் வழங்க வேண்டும், அவர்களை மீண்டும் […]
கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு!
கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு! சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய்க்கப்பலில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களின் பதவிகளும் இருப்பிடங்களும் வருமாறு:- 1) கப்பல் கப்டன் நிகலஸ் என்டனி (மட்டக்குளி) 2) பிரதம அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம) 3) பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில (ஹொரணை) 4) இரண்டாம் […]
ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும் : ரவிநாத் ஆரியசிங்க
ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும் : ரவிநாத் ஆரியசிங்க ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஐ.நாவுக்கான ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா கடந்த வருடம் ஸ்ரீலங்காவிற்கு வருகை […]
நானுஓயாவில் சூறாவளி 112 பேர் இடப்பெயர்வு, 21 வீடுகள் பாதிப்பு
நானுஓயாவில் சூறாவளி 112 பேர் இடப்பெயர்வு, 21 வீடுகள் பாதிப்பு நுவரெலியா – நானுஓயா கிளாரன்டன் மேற்பிரிவில் வீசிய மினி சூராவளி காரணமாக 112 பேர் இடம்பெயர்ந்து தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்கு இடைப்பட்ட தருணத்தில் வீசிய இந்த சூறாவளியால் 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. ஆனால், இதுவரையில் அனர்த்த முகாமைத்துவத்தில் இருந்து எவரும் தமது பகுதிக்கு […]
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து “வடக்கிலிருந்து படையினரை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது […]
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள்
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள் ஆளுந்தரப்பினரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்திற்கு ஏறச்செய்த சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில மூத்த உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையிலேயே சிவில் அமைப்புக்கள் இதனை வலியுறுத்தியுள்ளன. […]
வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம்
வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம் அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இந்த […]
கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது
கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, மனித உரிமைகளை பாதுகாப்பதில் நல்லாட்சி அரசு வினைத்திரனுடனும், தீவிரமாகவும் செயற்பட்டுவருகின்றது. உள்ளகப் பொறிமுறைமீது அரசு […]
உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு
உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் […]





