இலங்கை செய்திகள்

கால அவகாசம் - சி.க செந்திவேல்

கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ?

கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ? இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என குறிப்பிட்டார். வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஒன்று […]

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் - மு.தம்பிராசா

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார்

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்தமை அவர் செய்த தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற […]

பிரபாகரன் - கோட்டாபய ராஜபக்ச

பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார்

பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர் எனவும் கூறப்படுவதாக அவர் கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று […]

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு ஸ்ரீலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் என தலைப்பிடப்பட்டு இந்த வரைப்புத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொண்டிநீக்ரோ, மசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த தீர்மானத்திற்கு பிரதானமாக அனுரணை வழங்கும் நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் […]

சிவாஜிலிங்கத்தின் பிரேரணை

சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன்

சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்தள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். எனினும் இந்த விடயத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர் 14 ஆம் திகதி விசேட அமர்வை நடத்தி […]

மலையகப் பெண்கள் பணிப்பெண்

மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும்

மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவதோடு மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்கு செல்வோர் அனுப்பும் பணமே ஸ்ரீலங்காவின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தருவதாகவும் இதில் மலையகப் பெண்களின் பங்களிப்பும் பாரியளவில் காணப்படுவதகாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் […]

வடக்கு கிழக்கு

வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்காது முன்வைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இதனால் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மேற்கொள்ளும் போராட்டங்களை வடக்கு கிழக்கினை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் […]

இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி

இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார். நேற்றையதினம் கச்சதீவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் கடலில் ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைத் தலைமையிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான எந்த அனுமதியும் கோரப்பட வில்லை. […]

அதிகாரத்தை கைப்பற்றுவதே – அமைச்சர் கயந்த

அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த

அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, நாடாளுமன்றத்தையும் குழப்பிடியத்து ஆட்சி அதிகாரத்தைக் விரைவில் கைப்பற்றுவதற்கே கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அஸ்கிரிய பீட மாகாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். […]

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத்

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவியுமான ரேணுகா ஹேரத் தமது 72ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனையில் நடைபெறவுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் […]