தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இரணைமாதா நகரில் கடந்த 69 நாட்களாக பேரராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், தம்மால் […]
இலங்கை செய்திகள்
பல்கேரியாவிலிருந்து 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர். இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கண்ணிவெடிகள் அற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்
கடந்த 30 வருட உள்நாட்டுப் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவான மக்(MAC) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் , 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் மக் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 2025 இல் கண்ணிவெடிகள் […]
காணாமல் போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி.க்கு நேரடி தொடர்பு: சரவணபவன்
”கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு, மெக்ஸ்வல் […]
பிரதமர் தலைமையில் ஜெனீவா பிரேரணை அமுலாக்கக் குழு
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் […]
உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை
உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது […]
ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ […]
அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் […]
திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வரும் தனது புதல்வியை பார்க்க செல்ல அனுமதி வழங்குமாறு […]
வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை கூட்டமைப்பை பலப்படுத்தும்: யோகேஸ்வரன்
வடக்கு மாகாணசபையில் நியாயம் நீதி நிலைக்கவேண்டும், அங்கு ஏற்படும் ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”கிழக்கு மாகாணத்தில் பல நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. விசாரணைகள் நடத்தப்படவில்லை. முதலமைச்சர் மாநாடு நடத்தியதில் […]





