இலங்கை செய்திகள்

புலம்பெயர் அமைப்புகளின் திருப்திக்காக என் மீது விசாரணை: கோட்டா

புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா தம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச, தெரிவித்துள்ளார். அர்த்தமில்லாத விசாரணைகளில் தன்னை தொடர்புபடுத்தி விட்டு தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

கொழும்பின் பல்வேறு இடங்களில் டெங்கு நோய், வைரஸ் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவல் அதிகரித்துள்ளதால் மக்களை அவதாதனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பாரிய வறட்சிக்கு பின்னர் கடுமையான மழை பொழிந்ததால் குப்பை கூலங்களில் கழிவு அகற்றப்படாமை, கால்வாய்களில் அசுத்தமான நீர் பெருக்கம் மற்றும் சூழல் சுத்தமின்மையால் இவ்வாறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக மத்திய கொழும்பின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு […]

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. […]

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு காலதாமதமின்றி கூட்டப்பட வேண்டும்: ரெலோ வலியுறுத்தல்

வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலதாமதமின்றி உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் […]

குற்றவாளிகளை காப்பாற்றும் வடக்கு முதல்வரின் தீர்மானத்தை ஏற்க முடியாது: சுமந்திரன்

வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனவும் ஏனைய […]

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற கடும் நிபந்தனைக்கு அமையவே படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன. கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகிறார் அருட்பணி ஜெபரட்ணம்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி அறிவித்தலை வத்திகானிலுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் ஆயராக அருட்பணி ஆற்றிவந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை சுகயீனம் காரணமாக ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க […]

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. சிறிலங்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரித்தானிய அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2009 மே மாதம், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011 இல் அவசரகாலச்சட்ட விதிகள் தளர்த்தப்பட்டன. […]

தமிழரசுக் கட்சிக்கு எதிராக அணிதிரளுங்கள்: கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முதலமைச்சரை, பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக […]

சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு ஆளுநரிடம் கடிதமொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே […]