இலங்கை செய்திகள்

தெருவில் காத்திருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி

தெருவில் காத்திருந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள சம்மாவாம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதி தனது […]

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது! – ஐ.நா. அறிக்கையாளரின் அறிக்கையை மனதார வரவேற்று சம்பந்தன் கருத்து  

பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச  சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் […]

தேசிய அரசை ஆட்டங்காண வைக்க இடமளியோம்! – ஐ.தே.க. தெரிவிப்பு 

“தேசிய அரசை ஸ்திரமற்ற நிலைமைக்குக் கொண்டுசெல்ல எந்தவகையிலும் இடமளிக்கப்போவதில்லை”  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “தேசிய அரசைக் கவிழ்க்கப்போவதாக எண்ணிக்கொண்டு அரசிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆப்பிழுத்த குரங்குக்கு நேர்ந்த கதியே நேரும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கத் தயாராகிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. […]

தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் மஹிந்த அணியோடு சங்கமிக்காது சு.க.! – சுயாதீனமாக இயங்கவே 18 உறுப்பினர்களும் அனுமதி கோரினர் என்கிறார் அமரவீர  

“தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள்”  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு விரைவில் கூடும் எனவும் அவர் கூறினார். தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா உட்பட 18 சுதந்திரக் கட்சி […]

ஆட்சிக் கவிழ்ப்பே தீர்வு! – மஹிந்த கூறுகின்றார் 

“நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன்.”  – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர். அரசுக்கு என்ன செய்வதென்று தெரியாதுள்ளது. இதனால்தான் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது.தற்போதைய அரசின் இராணுவ வேட்டையை நிறுத்துவதற்கு ஆட்சிமாற்றம்தான் ஒரே வழி. நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் […]

டிசம்பர்வரை பொறுத்திருக்கமுடியாது! – சு.க. அதிருப்திக் குழுவினர் தெரிவிப்பு

டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. தேசிய அரசிலிருந்து வெளியேறுமாறு சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழுவைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும், வரவு – செலவுத் திட்டத் தொடருடன் முடிவெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது […]

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் : கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசாங்கம் கையாளும் பாரபட்சப் போக்கினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் ஒதுக்கப்படவேண்டிய நிதி வழங்கப்படாமையினால் மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் […]

தலைமன்னாருக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (திஙகட்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் ரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் […]

தலைநகரில் 28 ஆவது வீர மக்கள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் […]

போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் […]