இலங்கை செய்திகள்

வடக்கு அமைச்சர் டெனீஸை நீக்க முதல்வர் முடிவு! – நடவடிக்கை எடுப்பேன் என்று ரெலோவுக்கு அவர் அறிவிப்பு

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் […]

மைத்திரி, ரணிலுடன் அடுத்த வாரம் கேப்பாப்பிலவு மக்கள் நேரில் பேச்சு!

கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடுத்த வாரம் நேரில் சந்தித்து நீதி கோரப்போகின்றார்கள். இந்தச் சந்திப்புக்கான முயற்சிகளைத் தான் மேற்கொண்டுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்கள் 136 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் […]

புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி

புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த […]

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமா மு.கா?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  மற்றும் ஹசனலி தரப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பேச்சு எதிர்வரும் கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சு முடிந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா […]

புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி. 

“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின. ஆனால், எந்தக் […]

2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.

“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.”  – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை […]

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை […]

ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை நிஜமாக்கிய ஓவியர் வீரசந்தானத்திற்கு அஞ்சலி

தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்னும் ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றிய மறைந்த, ஓவியர் வீரசந்தானத்திற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த நிலையில் சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடிய இவர், ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதிலும் மிகவும் […]

கர்ப்பிணிகளுக்கு சுகாதாரமற்ற போஷாக்கு உணவு வழங்கப்படுவதாக முறைப்பாடு

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில், இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூர் சபையில் முன்வைத்தார். அண்மைக்காலமாக வழங்கப்பட்டுவரும் […]

இலங்கை பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டது. அதில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், விவசாய ஒத்துழைப்புக்கள், […]