அயர்லாந்து நாட்டுப்பெண்ணைக் கடத்தி அவரை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்தரை ஆட்டோசாரதியை எல்ல பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆட்டோசாரதியுடன் போராடிதப்பியோடிவந்த அயர்லாந்து நாட்டுப்பெண் கடுங்காயங்களுடன் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சேர்ந்த இப்பெண் தனது கணவருடன் சுற்றுலாவாசிகளாக எல்லப் பகுதிக்குவந்துள்ளனர். இவர்கள் சுற்றுலாவிடுதியொன்றிற்குச் செல்ல அப்பகுதி ஆட்டோவொன்றில் பயணித்தனர். அவ்வேளையில் ஆட்டோசாரதி தந்திரமாக அயர்லாந்துநாட்டுப் பெண்ணை கடத்திச் செல்லும் நோக்குடன் […]
இலங்கை செய்திகள்
புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் வெளியாகும்: பிரதமர்
புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘இலங்கை மக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘ நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய […]
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் கிழக்கு விஜயம்
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜெஃப்ரி டேவிட் ஃபெல்ட்மென் (Jeffrey David Feltman) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போபொல்லாகமவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட்டைச் சந்தித்து, கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்தோடு, கிழக்கின் சிவில் சமூக அமைப்பினரையும் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
உறவுகளுக்காய் மாதக்கணக்கில் வீதியில் போராடும் மக்கள்!
யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயக பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (புதன்கிழமை) 150 நாட்களை எட்டியுள்ளது. கடந்த 150 நாட்களாக இரவு பகலாக வெயிலிலும் குளிரிலும் தமது உறவுகளுக்காய் ஏங்கித் தவிக்கும் தமது நிலை குறித்து, அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை, தமது வேதனையை […]
உமாஓயா திட்டத்துக்கு விரைவில் தீர்வு : அரசு திட்டவட்டம்
உமாஓயா திட்டத்தை நிறுத்த முடியாது. 75வீதமான பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களுக்கு பாதுகாதுகாப்பான முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததாக அமையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இத்திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகளாவது, • உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு […]
ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம்
ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐரோப்பிய வர்த்தக மண்டலம் நேற்று கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, ஆடை உற்பத்தியை மட்டும் மட்டுப்படுத்தி பயணித்த கைத்தொழில் உற்பத்தில் இன்று பல்வேறு உற்பத்திகளை நோக்கி விரிவடைந்துள்ளது. கண்டிமுதல் அப்பாதோட்டை வரை கைத்தொழில் வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிலர் இரண்டு […]
மறுபடியும் ஜனாதிபதியாக களமிறங்குவார் மைத்திரி! – 2020இல் தனியாட்சியே குறிக்கோள் என்கிறது சு.க.
2020இல் தனியாட்சி அமைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறிக்கோளாக இருக்கின்றது என்றும், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்குவார் என்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ […]
மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை எப்படியாயினும் இந்த மாத முடிவுக்கு முன்னர் இறுதிசெய்து பூர்த்தியாக்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயம் என்று பார்க்காமல் வழிகாட்டல் குழுவின் […]
தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்கு ஆபத்து! – இப்படிக் கூறுகின்றது சு.க.
“ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அத்துடன், அது ஸ்திரமற்ற அரசியல் நிலைமையையே தோற்றுவிக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. இவ்விடயம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேசிய அரசமைக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு […]
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் மைத்திரியின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு!
“நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார். இன்று புதன்கிழமை யாழ். பொது நூலகத்துக்கு விஜயம்செய்து நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் எலும்பு இயல் […]





