இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு […]
இலங்கை செய்திகள்
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் […]
ரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்! நாமல் வேண்டுகோள்
இந்திய புலனாய்வு அமைப்பான ரோவிடம் பணம் பெறும் இரு அமைச்சர்களின் விபரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிடவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். சில அமைச்சர்கள் ரோவிடமிருந்து பணம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உண்மையானால் இதுவொரு தேசிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். அதேவேளை இது சர்வதேசரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள நாமல்ராஜபக்ச இந்த அமைச்சர்களை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது எனவும் […]
டிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், […]
ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள […]
இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்
யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் […]
பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்
பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து […]
யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை […]
இராணுவ அதிகாரி விவகாரம்? கடுப்பில் கோத்தபாய
யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் […]
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!
தமிழர்களின் அதிகார்பபூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களது உடலங்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமிலங்கள் 2018 நவம்பர் 27 மாவீர் நாளினை முன்னிட்டுசிரமதான பணிகள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன அதனடிப்படையில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர் அந்தவவையில் இன்று 20.10.18 அன்று காலை 8.30 மணிக்கு வட தமிழீழம் முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள மாவீரர் […]





