நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே […]
இலங்கை செய்திகள்
மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!
நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை […]
மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக
ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் […]
கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்
ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனக்கு பாதுகாப்பு வேண்டும்! விக்னேஸ்வரன் கோரிக்கை
தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பிலான கோரிக்கை கடிதம் ஒன்றை அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், தனது பாதுகாப்பு தொடர்பில் தான் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித பதிலும் இல்லலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவில் ரணிலுக்கு இப்படியொரு பேரிடி!
இலங்கை அரசியலில் எதிர்பாரத விதமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரதமரை அலரிமாளிகையிலிருந்து வெளியேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் மைத்திரி. இந்நிலையில் சற்றுமுன் அவர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அந்த வகையில் ரணிலின் காவலர் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார், அலரிமாளிகையில் நீர், […]
ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?
இலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச அவர்களினால் முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சகோதரர் கோதபாய ராஜபக்சே ஊடாக முப்படைகளை கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கூடும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயலாளர்கள் மாற்றம், பொலீஸ் மா அதிபர் […]
நாட்டில் தற்போது நிலவுவது இராணுவ ஆட்சியாகும்
பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்களான நளின் பண்டார மற்றும் சுஜவ சேனசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அலரி மாளிகையை விட்டு நாம் வெளியேற மாட்டோம், சட்டரீதியாக […]
ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!!
ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது. நீடிக்க உள்ளார் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அந்நாட்டின் […]
கூட்டமைப்பின் ஆதரவு மஹிந்தவுக்கு
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் […]





