மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செய்திகள்
கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு…
இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” […]
நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!
நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ […]
மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!
இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் […]
ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!
ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்றவர். அவர் பிரபாகரனுக்குச் சமமானவர். உள்நாட்டு தரப்புக்கள் மற்றும் ஊடகங்களை விடவும் பிரபாகர னுக்கு ஆதரவளித்தது போல் பன்னாட்டு சமூகம், பன்னாட்டு ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன. இவ்வாறு கூறியுள்ளது பொதுபலசேனா அமைப்பு. கொழும்பில் பொதுபலசேனா நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலர் மாகல்கந்தே சுதந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]
தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்
வடக்கு – கிழக்கை இணைத்து, நாட்டை அரசமைப்பு ஊடாகப் பிளவு படுத்த எண்ணிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நோக்கங்களை முறியடிக்கவே இரு அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய. அவரது பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் நெடுநாள் அரசியல் கனவை மைத்திரி நிறைவேற்றி வைத்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. கூட்டு அரசு […]
இலங்கை ரூபாவின் பெறுமதியில் என்றும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி
இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.
பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! – மஹிந்தவா? ரணிலா பிரதமர்?
நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போது சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
இலங்கையின் குழப்பத்திற்கு எந்த நாடு காரணம்
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்கள் சிலரிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு வெளிநாடு காரணமாகயிருக்கலாம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்களும் அற்றவை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியலில் வெளிநாடொன்றின் தலையீடு குறி;த்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க […]
மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மைத்திரி
ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார். தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா, “பொய்க் குற்றச்சாட்டுக்களுக்காக சிறைக்கு செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை […]





