இலங்கை செய்திகள்

ஜனாதிபதி

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் இதுகுறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் […]

ரணில் மீண்டும் பிரதமரானால்… ஜனாதிபதி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை […]

ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் கட்சி தாவுவது உறுதி

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் […]

இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 54 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் எதிரணியில் இருக்கையில், 16 பேர் கொண்ட தமிழ் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுதும் அதே வாதத்தின் பிரகாரம் எதிரணியில் ஐ.தே.க […]

எரிபொருள் விலை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த […]

ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா!!

கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் […]

இலங்கையின் ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி, நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் […]

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தநிலையில் சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

நீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பால் ரணிலிற்கு பேரிடி

தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு!!

பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க இன்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தெமட்டகொட பெற்றோலியக் […]